/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விதித்த வரியை டில்லி அரசு வாபஸ் பெற்றதுவிதித்த வரியை டில்லி அரசு வாபஸ் பெற்றது
விதித்த வரியை டில்லி அரசு வாபஸ் பெற்றது
விதித்த வரியை டில்லி அரசு வாபஸ் பெற்றது
விதித்த வரியை டில்லி அரசு வாபஸ் பெற்றது

புதுடில்லி: டீ, காபி, பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு மீது விதிக்க திட்டமிட்டிருந்த வரி விதிப்பை, டில்லி அரசு நேற்று வாபஸ் பெற்றது.
விவாதத்திற்கு நேற்று பதில் அளித்துப் பேசிய அம்மாநில நிதி அமைச்சர் வாலியா கூறியதாவது:இயற்கை எரிவாயு, தேயிலை, பாத்திரங்கள், பிரஷர் குக்கர் போன்றவற்றின் மீதான வரியை தற்போதுள்ள 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அது வாபஸ் பெறப்படுகிறது.அதேபோல், சமையல் எரிவாயு மீதான 4 சதவீத வாட் வரியும் ரத்து செய்யப்படுகிறது. இருந்தாலும், சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை வாபஸ் பெற்றது தொடரும். எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 310 ரூபாயாக உயரும்.வரி விதிப்பை வாபஸ் பெறுவதன் மூலம், அரசுக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். மேலும், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.இவ்வாறு வாலியா கூறினார்.